வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 21/12/2021 காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் சந்தை கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன் சிறப்பு விருந்தினராக கழக மத்திய குழு உறுப்பினரும், நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான திரு.சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.