குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தின் ஒரு நாள் சேவையில் தினமும் 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதை தெரிவித்தார்.
இதன்படி ஒரு நாள் சேவைக்கான வரும் தினசரி விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 1,000 என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இதன் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த அக்டோபரில் நிலவிய நிலை தற்போது தணிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் பொதுமக்கள் சேவைகளைப் பெற வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்