அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வந்த பணிபகிஷ்கரிப்பானது நேற்றுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வைத்திய நியமனங்களில் அரசியல் தலையீட்டை இடைநிறுத்தல் உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்த மாதம் 21ஆம் திகதி 5 மாவட்டங்களை அடிப்படையாக வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

எனினும் அரச வைத்திய அதிகாரிகளின் இன்றைய (24) செயற்குழு கூட்டத்தில் பணிபகிஷ்கரிப்பை நிறைவு செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதென அச்சங்கம் தெரிவித்துள்ளது.