எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த பஸ் கட்டணங்கள் அமையுமென அவர் அறிவித்துள்ளார்.

பஸ்கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் நாடளாவிய ரீதியில் பணிநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.