வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என். வினோபிரகாஸ் தலைமையில் இன்றையதினம் மாலை நடைபெற்றது.
அலங்கார நுழைவாயில் அமரர் யசோதரன் திவ்யா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தாரின் நிதி பங்களிப்பிலும், நுழைவாயிலுக்கானா மதகு மற்றும் கிரவல் என்பன நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் நிதி மூலமும் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் குருமன்காடு பிள்ளையார் ஆலய பிரதமகுரு திவாகரக்குருக்கள், வவுனியா நகர சபையின் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, பண்டாரவன்னியன் சனசமூக நிலைய உப தலைவர் அன்னலதா தமிழ்ச்செல்வன், சிவன் ஆலய செயலாளர் பாலேந்திரன், பொருளாளர் விக்கினபாவானந்தன், நாகதம்பிரான் ஆலய உப செயலாளர் செந்தில்நாதன், உறுப்பினர் செல்வநாதன் ஆகியோருடன் கழக தோழமைகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட்டத்தக்கது.