2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கலாம் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரிகள் இப்போது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.