27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி, கழகத்தின் உபதலைவர்களுள் ஒருவரான தோழர் கேசவன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் தோழர் முரளி, தோழர் கிருபாமாஸ்டர் மற்றும் தோழர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.