நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம்  (26) மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,901ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த 17 பேரில், 11 ஆண்களும், 6 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.