கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றில்   தீ பரவியுள்ளது. அத்தீ   சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

அந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை நிலையத்துக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்களில் நான்கு வாகனங்கள் ஸ்தலத்துக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.