டிசம்பர் மாதத்தில் சுமார் 70,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கூறுகிறது.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளனர் என  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதத்திலும் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் கூறினார்.

2022 ஜனவரியில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜேசிங்க  குறிப்பிட்டார்.