அமரர் தோழர் சின்னமெண்டிஸ் (விஜயபாலன்) அவர்களின் தாயார் திருமதி அரியராஜசிங்கம் ரட்ணசோதி அவர்கள் நேற்று (27.12.2021) கனடாவில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

தோழர் மென்டிஸ் அவர்கள் யாழ். மாவட்ட இராணுவப் பொறுப்பாளராகவும் பின்பு தள இராணுவப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்ததோடு. அவரது குடும்பத்தினரும் ஆரம்ப காலம் முதலே கழகத்திற்கு மிகவும் ஆதரவாக செயற்பட்டிருந்தார்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
28.12.2021.