வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் கிளிநொச்சியில் இன்று (30) இடம்பெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 11 மணி அளவில் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமை நாளாக அனுஸ்டிக்கப்படும் 30 ஆம் திகதியில் மாதாந்தம் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் இன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.