Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 31 January 2022
Posted in செய்திகள் 

கடுகன்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும் தோழர் லாலா (ரவிக்குமார்) அவர்களின் அன்புத் தந்தையுமாகிய திரு.  சிதம்பரம் இராமன் அவர்கள் நேற்று (30.01.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

நேற்று (30), 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) தெரிவித்துள்ளார் Read more

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு பாடசாலைகளின் வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து செயற்படுத்த சுகாதாரத்துறையின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர். Read more

இன்று (31) முதல் நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இராணுவத்தளபதி இதனை தெரிவித்திருந்தார்.

மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும் (30). இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (30) நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. Read more

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

எதிர்வரும் வாரங்களில் விசேட தடுப்பூசி வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அதற்கமைய பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான நடமாடும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். Read more

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more