புங்குடுதீவு 06ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சிவக்கொழுந்து நடராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மகன் தோழர் நடராஜா உதயகுமாரன் (சுவிஸ்) அவர்களின் நிதி பங்களிப்பில் பல சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
முதல் பணியாக வவுனியா சிதம்பரபுரத்தில் வசிக்கும் பாடசாலை மாணவன் ஒருவருக்கான 23 500/- பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஆசிரியர் கனகரத்தினம் மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வழங்கி வைக்கப்பட்டது.