தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நதீகா ஜனகே தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது MRI நிறுவனத்தில், 10 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த 10 பேரில் 8 பேர் வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.