மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேலைக்காரியும் அவரது தந்தையையும் எதிர்வரும் 18 திகதிவரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வானே இவ்வாறு இன்று (04) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி பார்வீதியிலுள்ள எஜமானியம்மாவான 48 வயதுடைய செல்வராசா தயாவதியை வேலைக்காரி ஒருவர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்த 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற வேலைக்காரியையும் அவரது தந்தையையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு காணொளியூடாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீவதான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.