ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கமைய, சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் தொடர்பில் சுசில் பிரேமஜயந்தவிடம் இன்று (04) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, நாளை முதல் மீண்டும் தனது சட்டத்தரணி பணியை ஆரம்பிக்கவுள்ளதாக பதிலளித்தார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கியிருப்பதாக அறியக்கிடைத்தது. அது பெரிய விடயம் இல்லை. 2000 ஆம் ஆண்டு தான் நான் அமைச்சரானேன். நாளையில் இருந்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் “நுவரெலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அமைப்போம். ஆகவே இப்போது இதை ஒத்தி வைப்போம்” என கூறிய போது, எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பில், மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில், “நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில், “நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். ஆகவே இப்போது இதை ஒத்தி வைப்போம்” என கூறிய போது, எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில் பிரேமஜயந்த தான்.

நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரிய அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளை பிரித்து புதிய பிரதேச சபைகளை அமைக்க வேண்டும் என நான் கோரிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அம்பாறை மாவட்டத்திலும் புதிய பிரதேச சபைகளை அமைப்பதாக நான் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் ரவுப் ஹக்கீமின் மேடையில் இருந்து அந்த மக்களுக்கு உறுதி அளித்துள்ளேன். அந்த சபைகள் இன்னமும் அமைக்கப்படவில்லை. ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு அமைக்கப்படும் போது, இதையும் அப்போது அமைப்போம். இப்போது இதை ஒத்தி வைப்போம். இப்போது இதை அமைத்தால், ஏன் நுவரெலியாவில் மட்டும் அமைக்கிறீர்கள்? ஏன் அம்பாறையில் அமைக்கவில்லை? என்ற குற்றச்சாட்டு எழும்” என்றார்.

“அம்பாறை மக்களுக்கு நீங்கள் வாக்குறுதி அளித்து இருந்தீர்கள் என்றால் அதை நிறைவேற்றுங்கள். அது உங்களுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் இடைப்பட்ட பிரச்க்சினை. ஆனால், நுவரெலியா வேறு. அம்பாறை வேறு. தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாங்களும் எங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். நாட்டில் ஏனைய பிரதேசங்களில் 25,000 பேருக்குகூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, தலா இரண்டரை இலட்சம் ஜனத்தொகை கொண்டதாக அம்பகமுவ, நுவரெலிய பிரதேச சபைகள் 30 வருடங்களாக செயற்படுகின்றன. இது மிகப்பெரும் அநீதி. பாரபட்சம். எமக்கு கட்டாயம் புதிய பிரதேச சபைகள் அமைத்தே வேண்டும்” என சிங்களத்தில் கடுமையாக சத்தம் போட்டேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற அந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில், இதை சொல்லி விட்டு, நான் அமர்ந்து இருந்து நாற்காலியை உதைத்து விட்டு, கூட்டத்திலிருந்து, வெளியேற கோபத்துடன் நான் எழுந்த போது, எனக்கு ஆதரவாக “மனோ எமதிதுமாகே இல்லீம இதாம சாதாரணய்” (அமைச்சர் மனோவின் கோரிக்கை மிகவும் நியாயமானது) என சொன்ன நண்பர்தான், அன்றைய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

அதன் பிறகு தான் இன்று நுவரெலியாவில் செயற்படும், நோர்வுட், மஸ்ககெலியா, அம்பகமுவா, அக்கரபத்தனை, தலாவக்கலை, நுவரெலிய ஆகிய ஆறு புதிய பிரதேச சபைகளை அமைக்கும் வர்த்தமானியை வெளியிட அன்றைய அரசு இணங்கியது.