முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (06) கொழும்பில் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் வெற்றியுடன், சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கான வெற்றிப் பயணம் ஆரம்பமாகும் என, அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கத்துடன் இணைந்த அமைப்புக்களை பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக  உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.