கொக்கிளாய் எல்லைக்கிராம மக்கள் அக்கரைவெளி என்ற தமது நெல்வயற் பிரதேசத்துக்கு செல்வதற்கான இயந்திரப் படகுச்சேவையை இரு மாதங்களுக்கு மேற்கொள்வதற்குத் தேவையான (30,000/=)வழங்குமாறு எமது பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் மூலம் கழகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் அனுப்பிவைத்த 30,000/= நிதி இன்று (07.01.2022) கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வயற்பிரதேசம் பெரும்பான்மையின மக்களால் மகாவலித் திட்டத்தின் மூலம் அபகரிக்கப்பட இருந்த சமயம்
அப்போது விவசாய அமைச்சராக இருந்த க.சிவநேசன் அவர்கள், தனது அமைச்சு மூலம் அந்நிலங்களை புல்டோசர்கள் மூலம் துப்புரவு செய்து கொடுத்திருந்தார்.

படகுச்சேவையை வழங்குவதற்கு உதவிய பிரான்ஸ் கிளைத் தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.