11.01.1987இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த கழகத்தின் தளப் பொறுப்பாளர் தோழர் மென்டிஸ் (அரியராஜசிங்கம் விஐயபாலன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியரான தோழர் மென்டிஸ் அவர்கள், இராணுவப் பயிற்சி அளிப்பதிலும், அரசியல் ரீதியில் இளைஞர்களை வளர்ப்பதிலும் அதீத அக்கறை காட்டி வந்தார். யாழ். மாவட்ட இராணுவப் பொறுப்பாளராகவும் பின்பு தள இராணுவப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்த இவர் மிகச் சிறந்த போர் வீரனாகத் திகழ்ந்தார். இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களையும் செயற்பாடுகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.