Header image alt text

உபதலைவர், தளபதி அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு சுவிஸ் புளொட் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் இன்று வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 05ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 18 பிள்ளைகளுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. Read more

இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணி உதவியாக வழங்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார். Read more

2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின்  கடவுச்சீட்டுக்கள்  2022க்கான உலகின் மிகச் சிறந்த  கடவுச்சீட்டுகள்  என்று  தேர்வு செய்யப்பட்டுள்ளன. Read more

200 ரயில் சேவைகள் இரத்து-

Posted by plotenewseditor on 13 January 2022
Posted in செய்திகள் 

புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, 200 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 80 ரயில் சேவைகள் மட்டுமே இடம்பெறுவதான ரயில்வே திணைக்களத்தின் ​பொது முகாமையாளர் தெரிவித்தார்