உபதலைவர், தளபதி அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு சுவிஸ் புளொட் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் இன்று வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 05ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 18 பிள்ளைகளுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
.
கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான தோழர் காண்டீபன், நலன் விரும்பிகள் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்கள்.