கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குருபரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி நாகலிங்கம் இன்பமலர் அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பல கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததோடு, கழகத்தின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்ட கிளைகள் சார்பாக பதாகைகள் கட்டப்பட்டிருந்தன.
அத்துடன் கழகத்தின் லண்டன், கனடா, சுவிஸ், பிரான்ஸ், ஜெர்மனி கிளைகள் சார்பில் மலர்வளையங்கள் சாத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இன்று (14.01.2022) பிற்பகல் 1.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று மாலை 3.00 மணியளவில் அன்னையின் உடல் திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் இடம்பெற்றன.