உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் காற்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டி யாழ் உரும்பிராய் செல்வபுரத்தில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு மதனராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக 51ம் படைப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, பிரதேச செயலர் சுபாஜினி மதியழகன், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து விதாஹேதர, கிராம அலுவலர் நித்திய சுரேஷ்குமார், சமுர்த்தி உத்தியோகத்தர் குமுதினி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சுசியந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.