சுன்னாகம் ஐயனார் முன்பள்ளிக்கு பல்லூடக எறியி, திரை மற்றும் ஐயனார் இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள், மைதான மின்விளக்குகள் என்பன பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஉதவியில் வழங்கி வைக்கப்பட்டன.

சுன்னாகம் ஐயனார் கோவில் முன்றலில் இளைஞர் சேவைகள் அதிகாரி யுவறாஜ் தலைமையில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வில் வைத்து கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.