இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பதில் பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி மின்சார பொறியியலாளர்கள் குழுவொன்று இன்று (18) இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாகவும், பதில் பொது முகாமையாளரை நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் பொறியியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறையில் பணிக்கு சமூகமளிக்காததுடன் கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.