தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலை சமூகத்திடம் போட்டோ பிரதி இயந்திரத்தை வழங்கி வைத்தனர்.