முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்றைய தினம்  நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி,  நீதி அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.