கடுகன்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும் தோழர் லாலா (ரவிக்குமார்) அவர்களின் அன்புத் தந்தையுமாகிய திரு.  சிதம்பரம் இராமன் அவர்கள் நேற்று (30.01.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர்,  உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
31.01.2022.