Header image alt text

நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். Read more

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இன்று (29) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது செயலாளர் தெரிவித்துள்ளார்.  அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பி.க்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐ.டி. எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சபாநாயகர் காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான வர்த்தமானி அறிவித்தல்,    வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, பெப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. Read more

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். 88 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 82 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 6 பேருக்கும் டெல்டா பிறழ்வு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. Read more

28.01.2016இல் மரணித்த மட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில்லை பிறப்பிடமாகவும், புதூரை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் வெள்ளையன் (நாகமணி சிவராசா – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் – வவுணதீவு) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் இன்று…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிதக்கின்றன. Read more

துருக்கி வௌிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளார். வௌிவிவகார அமைச்சருடன் மேலும் 9 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். Read more

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்றைய தினம்  நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more