Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 28 February 2022
Posted in செய்திகள் 

கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் அரபாத் (சிற்றம்பலம் திருச்செல்வம்) அவர்கள் நேற்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக மரணித்த செய்தியறிந்து மிகுந்த துயரடைகின்றோம். Read more

ஜெனீவா: ஐ.நா. பொதுச் சபை அவசக் கூட்டத்தைக் கூட்டும் நிமித்தமாக பாதுகாப்பு பேரவையின் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதிலிருந்து இந்தியா விலகிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்பு பேரவையின் உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் வாக்களித்தன.ரஷ்யா உறுப்பு நாடாக இருந்தாலும் அதற்கு எதிரான தீர்மானம் என்பதால் எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. Read more

36 நாடுகளில் உள்ள விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. Read more

ஒரு சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் Zelenskyy ஐரோப்பிய ஒன்றியத்தை அவசரமாக கேட்டுக் கொண்டார். Read more

பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறுகிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் சற்றுமுன் ஆரம்பித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று(28) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வ​ரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. Read more

உக்ரேன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள், தனது நாட்டுக்கு எதிராக நட்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது பாதுகாப்பு பிரதானிகளுக்கு நாட்டின் தடுப்புப் படைகளை அதிக எச்சரிக்கையுடன் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Read more

ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேற போலந்து எல்லையில்  காத்திருப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர். ஹசன் குறிப்பிட்டார். Read more

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். Read more