தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் உரிமை காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்த பின்னர் தனது ட்விட்டரில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

12 வருடங்கள் கடந்தும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் துயரம் இன்னும் நீங்காமல் அவ்வாறே உள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்குள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உண்மைக்கும் நீதிக்குமாக போராடும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.