வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார். பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளை நாளை (07) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் அமைச்சர் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார்