செலுத்த வேண்டிய தண்டப்பணத்தை விரைவில் செலுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலத்தின் போது தோல்வியடைந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து குறித்த 08 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை வௌியேறவில்லை என பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வௌியேறும் வரை செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தையும் இவர்கள் இதுவரை செலுத்தவில்லை என பாராளுமன்ற நிர்வாகம் கூறியுள்ளது.

அவைதவிர, நீர் மற்றும் மின்சார கட்டணங்களையும் உடனடியாக செலுத்துமாறு பாராளுமன்றத்தினால் இரண்டாவது தடவையாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள

உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிப்பதற்கான கால எல்லை நிறைவடைந்த பின்னரும் அனுமதியின்றி தங்குபவர்களிடமிருந்து நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.