இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்.ஜி.புஞ்சிஹேவா, பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இந்த வருடத்தில் நடத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் அதன் தேர்தலை ஒருவருடத்துக்கு ஒத்திவைத்துள்ளார். எவ்வாறாயினும் இவ்வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் ​தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு என்றவகையில் எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்த நாம் தயாராக இருக்கிறோம். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலைகளுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.