தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வு இன்றுமாலை எமது கட்சியின் குடியேற்றக் கிராமமான வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் ஆச்சிபுரம் கிராம மகளிர் செயற்பாட்டாளர் சிரோமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அகவணக்கம் மற்றும் நினைவுப் பகிர்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் சு.காண்டீபன் ஆகியோரும், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
.
இதன்போது ஆச்சிபுரம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.