தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் இடம்பெற்றது.

சுவிஸ் புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கழகத்தின் ஜெர்மன், லண்டன் மற்றும் கனடா கிளையினர் இணை அனுசரணை வழங்கியிருந்தனர்.

கழகத்தின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை உபதவிசாளர் சிவகுமாரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் கவாஸ்கர், சி.சிவலிங்கம், கெங்காதரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கேதினி, கிருபாஜினி, அதிபர் யோகேஸ்வரன், வித்தியானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் க.சிவலிங்கம், ஆசிரியர் மயூரன், வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் சுதந்திரன், உறவுக்கு கை கொடுப்போம் அமைப்பின் இணைப்பாளர் மாதவன், கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன், செயலாளர் ஜூட், மத்திய குழு உறுப்பினர் வசந்தராஜா, கழகத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மணியம், கட்சியின் மகளிர் அமைப்பினர், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கழகத்தின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்) அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.

நினைவுரைகள், விருந்தினர் உரைகள் இடம்பெற்றதையடுத்து எமது கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்ற செயற்பாட்டாளர்கள் 100 பேருக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி அவர்கள் கௌரவிக்கப்பட்டு அவருக்கு நினைவுப்பரிசில் மற்றும் பணப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.

இறுதியில் மதியபோசனம் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

0