ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வழிநடாத்தவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு, இன்று (20) தெரிவித்துள்ளது.

ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு 2022 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 01 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் சபையில் முன்வைக்கவுள்ள அதே வேளையில், 2022 மார்ச் 03ஆந் திகதி இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடல் அமர்வொன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, பேரவையின் 49ஆவது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் உரையாற்றவுள்ள வெளிநாட்டு அமைச்சர், அதன் பின்னர் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் உரையாற்றுவார்.

இந்த விஜயத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்