விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (22) அறிவித்துள்ளார்.

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி இருந்த நிலையிலேயே சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையாத நிலையில், அவற்றை பாராளுமன்றில் நிறைவேற்றுவதாக இருந்தால், சபையின் அனைத்து உறுப்பினர்களின் 3 இல் 2 பெரும்பான்மை தேவை, அல்லது பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.