மார்ச் 2ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ், இன்று (23) தெரிவித்தார்.

சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் 14 நாட்கள் கால அவகாசம் மார்ச் 1ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த சம்பள முன்மொழிவு முரண்பாடுகளை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.