ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேற போலந்து எல்லையில்  காத்திருப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர். ஹசன் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் எல்லைப் பகுதி அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அனைவரையும் போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் எம்.ஆர். ஹசன் கூறினார்