நேற்று முன்தினம் (27), ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட உக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில், உக்ரேன் இராணுவ பிரிவு ஒன்று அழிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவகளின் சடலங்களை கண்டெடுக்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுமி நகர அரசு நிர்வாக தலைவர் டிமிட்ரோ லெவிட்ஸ்கி தெரிவித்தார்.

“பல பேர் இறந்துள்ளனர். தற்போது உயிரிழந்த 70 உக்ரேன் படையினரை புதைப்பதற்கான இடங்கள் தயாராகிவருகின்றன” என, அவர் டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஆனால், எதிரிகளுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது,” எனக்கூறிய அவர், “அந்நகரத்தில் ஏராளமான ரஷ்ய சடலங்களும்” இருப்பதாக கூறினார்.

அந்த சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.