அமைச்சு மற்றும் இரு இராஜாங்க அமைச்சுகளின் பொறுப்புகள் மீண்டும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய புதிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

வன பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் மற்றும் அரச மர கூட்டுத்தாபனம் ஆகியன வனஜீவராசிகள் மற்றும் வன வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பதிவாளர் நாயகம் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், தேசிய பாதுகாப்பு நிதியம், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் நமக்காக நாம் நிதியம் ஆகியன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக புதிய வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடர்முகாமைத்துவ நிலையம், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை, தேசிய இடர் நிவாரண சேவை, வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ஆகியன இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டப்ளியூ.பீ. பாலித்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.