யாழ்., புத்தூர் பகுதியில் இன்று பிற்பகல் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர். புத்தூர் பகுதியைச் சேர்ந்த குகப்பிரகாசம் ( வயது 59), அவரது மனைவியான சுகுணா (வயது 55) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலுள்ள நீர்த் தொட்டியில் மனைவி நீர் அள்ளும்போது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்றவேளை கணவனும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது இரு பிள்ளைகளில் ஒருவர் பணிக்கும், மற்றையவர் பல்கலைக்கழகமும் சென்றிருந்த நிலையில், அவர்கள் வீடு திரும்பிய பின்னரே பெற்றோர் இறந்து கிடந்ததை அவதானித்து அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.