Header image alt text

எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமை போன்று நடாத்திச் செல்வதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். Read more

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ குறிப்பிட்டார். Read more

எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, காணாமல் போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, அரசியலமைப்பு குறித்து கூட்பமைப்பினர் ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தவுள்ளதாக  கூறப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டியுள்ளதாக பஸ் சங்கங்கள் கூறியுள்ளன. ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபாயாகவும், பஸ் கட்டணம் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். Read more

முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாயும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாயும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது. Read more