முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாயும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாயும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இது நியாயமான விலை அதிகரிப்பு  என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.