Header image alt text

தோழர் கார்த்திக் (கணபதிப்பிள்ளை மகேந்திரன் அவர்கள், செட்டிபாளையம்) 14.03.2021

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் Changyong Rhee, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர். ஆட்டிகலவை கொழும்பில் சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. Read more

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது  தொடங்கியுள்ளன. இரு தரப்புக்கும் இடையேயான தொடர்புகள் கடினமாக உள்ளது என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பேச்சுவார்த்தையாளருமான Mykhailo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Read more

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம், 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஆகக்கூடிய பஸ் கட்டணம் 1,498 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் பைசால் பின் பர்ஹான் அல் சவுட் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(14) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார். சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சருடன் இராஜதந்திரிகள் உள்ளிட்ட மேலும் 17 வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். Read more