சஜித் பிரேம தாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், காலி முகத்திடல் முற்றாக முடங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி காலி முகத்திடலுக்கு முன்பாக முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“நாடு அழிந்தது – போதும் போதும். மேலும் அழிவை அனுமதிக்க முடியாது” என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வைக் கோரி,  இரண்டு பிரதான வீதிகளின் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள காலி முகத்திடலை நோக்கி பேரணியாகச் சென்றுள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.