முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14 வயதான இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(16) காலை மேலதிக வகுப்பிற்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற இரு நண்பிகளும் இரவு வரை வீடு திரும்பாதமையால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், முல்லைத்தீவு தலைமையக பொலிஸாரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன