இலங்கை மத்திய வங்கியால், 83.04 பில்லியன் ரூபாய் புதிய பணம் அச்சிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் பணம் அச்சிடும் தரவுகளை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியிடம் 15ஆம் திகதியன்று திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை 1,627.01 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளதுதுடன், இந்தத் தொகை கடந்த 14ஆம் திகதி 1,543.79 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.